ஸ்ரீராமஜெயம்
ஓம் நமோ நாராயணாய

ஸ்ரீ கமலவல்லி தாயார் சமேத, நீலமாணிக்க பெருமாள் திருக்கோயில், நெரும்பூர் கிராமம், திருக்கழுக்குன்றம் தாலுகா, செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு – 603109

இந்த திருக்கோயில் சென்னையின் புறநகர்ப் பகுதியில், மகாபலிபுரம் மற்றும் கல்பாக்கம் பகுதிகளுக்கு அருகில், பாலாறு நதிக்கரையில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து சுமார் ஒரு மணி நேரப் பயணத்தில் இக்கோயிலை அடையலாம். கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றைக் கொண்ட இந்த புனிதத் தலம், தேவர்கள் பூஜை மற்றும் யாகங்கள் செய்து, ஸ்ரீமன் நாராயணனின் அருளால் சாப விமோசனம் பெற்றதாக நம்பப்படும் இடமாகும். அப்போது, நீலமாணிக்கம் போன்ற ஒளி வீசும் கண்களுடன், பொன்னொளி திருமேனியுடன் பகவான் விஷ்ணு தேவர்களுக்கு தரிசனம் தந்ததாகவும், அவரது திருஹ்ருதய கமலத்தில் மகாலக்ஷ்மி (கமலவல்லி) வாசம் செய்ததாகவும், ஹனுமத் பிரசன்ன நாடி மற்றும் புராணங்களின் வாயிலாக தெரிய வருகிறது. https://maps.app.goo.gl/NcmJeiR6UahdwERNA [Location Map].
வரலாற்றுப் பதிவுகளின்படி, தொண்டை மண்டலம் என அழைக்கப்பட்ட இந்தப் பகுதி, முற்போக்கு சோழர்கள், களப்ரர்கள், அதன் பின்பு பல்லவ அரசர்கள் ஆகியோரால் பல காலகட்டங்களாக ஆட்சி செய்யப்பட்டது.
சில விசேஷ தினங்கள் மற்றும் உச்சவ காலங்கள் பின்வருமாறு:
- நித்ய கால இரண்டு வேளை பூஜைகள்
- மாதாந்திர பௌர்ணமி, ஏகாதசி, மாத பிறப்பு, திருவோணம் பூஜைகள்
- கார்த்திகை மாத பூஜைகள் மற்றும் கார்த்திகை தீபம்
- தீபாவளி சிறப்பு திருமஞ்சனம் பூஜைகள்
- வைகுண்ட ஏகாதேசி
- மார்கழி பூஜைகள் (ஆண்டாள் திருக்கல்யாணம் உட்பட), தை போகி / பொங்கல் பண்டிகை கல்யாண உச்சவம்
- புரட்டாசி சனிக்கிழமைகள் (உறியடி உச்சவம்)
- பங்குனி உச்சவம்
- சித்திரை, வைகாசி – (லக்ஷர்ச்சனை & கல்யாண உச்சவம்)
- ஆடி பூரம், ஸ்ரீராம நவமி மற்றும்
- கிருஷ்ண ஜெயந்தி
இத்தலத்தில் திருமஞ்சனம் (அபிஷேகம்) மற்றும் அலங்காரம் சிறப்பாக நடத்தப்படுகிறது. மூலவர் திருமேனி நீலமாணிக்க ஸ்வாமி, அவரின் இருபுறங்களிலும் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உடன் அருள்பாலிக்கிறார். இக்கோவிலின் ஸ்தல விருட்சம் துளசி, புஷ்கரணி “ஆகாச தீர்த்தம்” என்ற பெயராலும் விளங்குகிறது.
மூலவர் சன்னிதியின் பின்புறத்தில் கமலவல்லி தாயார் மற்றும் ஆண்டாள் ஆகிய சன்னிதிகள் அமைந்துள்ளன.
இத்தலத்தில் பரிகாரம் மேற்கொள்ளும் வகையில் துலாபாரம் (எடைக் காணும் தராசு) அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழிபாட்டில், குழந்தையின் உடல் நலம் மற்றும் நீண்ட ஆயுளை வேண்டி, அந்தக் குழந்தையின் எடைக்கு சமமாக பருப்பு வகைகள், தானியங்கள், துணிகள், பாத்திரங்கள், காய்கறிகள் போன்றவை தானமாக வழங்கப்படுகின்றன. முடி காணிக்கை (மொட்டை அடித்தல்), மேலும் உபநயனம், திருமணம் போன்றவைகளும் நடைபெறுகின்றன.
இக்கோவிலில் தினமும் இரண்டு முறை நித்திய கால பூஜைகள் நடைபெறுகின்றன. பிரசாதம்/ நெய்வேத்தியம் அமுது சாய்க்க, அரிசி, பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், இதர சாமான்கள், புனரமைப்பு பணிகள் ஆகியவைகளுக்கும், அர்ச்சகர் சேவைக்குமான காணிக்கைகளும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. உரிய ரசீது தரப்படும், குங்குமம், மஞ்சள் அல்லது அக்ஷதை, பெருமாள் தாயார் படம் போன்றவைகள் காணிக்கைகளுக்கு ஏற்ப அனுப்பி வைக்கப்படும். நேரடியாகவும் பெருமாள் ஆசியுடன் சமர்ப்பிக்கப்படும்!. ஸ்வாமியின் அருள் அனைவருக்கும் உண்டாகட்டும்!
NEELA MANIKKAM CHARITABLE TRUST
Reg # – 158/IV/2025, Darpan Id – TN/2025/0933203, Phone/WhatsApp – +91– 8825597969,
Email – manikkamcharity@gmail.com
Account No – 44854002522 | State Bank of India, West Tambaram, Chennai 600045 – IFSC– SBIN0001243,
UPI – neelamanikkam@sbi

Thank you!
